ETV Bharat / bharat

தேர்தலில் களம் காணவிருக்கும் மற்றொரு அரசியல் வாரிசு!

author img

By

Published : Oct 3, 2019, 7:31 PM IST

மும்பை: மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில், வொர்லி தொகுதியில் போட்டியிடுவதற்காக ஆதித்யா தாக்கரே வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

ஆதித்யா தாக்கரே

மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலத்திற்கான சட்டப்பேரவை தேர்தல் அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து மகாராஷ்டிரா மாநிலத்தின் வொர்லி தொகுதியில் போட்டியிடுவதற்கு உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரே வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

சிவ சேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே, தனது மகன் ஆதித்யா தாக்கரேவை தேர்தலில் களம் காண அனுப்பியுள்ளார். அவர்களது குடும்பத்தில் யாரும் தேர்தலில் போட்டியிடுவதில்லை. முதன் முதலாக ஆதித்யா தாக்கரே தேர்தலில் போட்டியிடுகிறார்.

இது தொடர்பாக ஆதித்யா தாக்கரே கூறியதாவது, 'எங்களது குடும்பத்தில் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முடிவெடுத்திருந்தோம். ஆனால் காலங்கள் மாறிவிட்டன. மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காகத் தேர்தலில் போட்டியிடவுள்ளேன்' என்றார்.

மேலும் ஆதித்யா தாக்கரே வேட்புமனு தாக்கல் செய்ய வந்த போது சிவசேனா கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் ஆதித்யா தாக்கரேவை ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க: பாஜக - சிவசேனா கூட்டணி உறுதியானது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.