மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பாஜக 105 இடங்களையும் சிவசேனா 56 இடங்களையும் கைப்பற்றியது. கூட்டணி அமைத்து போட்டியிட்ட இவ்விரு கட்சிகள் தற்போது பரஸ்பரமாக விமர்சித்துவருகின்றன. இந்நிலையில், நாட்டின் பொருளாதார மந்தநிலைக்கு பாஜகதான் காரணம் என சிவசேனா தன் அதிகாரப்பூர்வ இதழான சாம்னாவில் விமர்சித்துள்ளது.
இது குறித்து கட்டுரையில், "2019-20ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி ஐந்து விழுக்காடாக உள்ளது. மனை வணிகம் (ரியல் எஸ்டேட்), ஆட்டோமொபைல் போன்ற துறைகளில் மந்தநிலை நிலவுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பொருளாதாரத்தை சீர் செய்ய மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
நாட்டின் பொருளாதாரச் சிக்கலுக்கு பணமதிப்பிழக்க நடவடிக்கை, சரக்கு மற்றும் சேவை வரி (ஐி.எஸ்.டி.) அமல்படுத்தப்பட்ட முறைதான் காரணம். உற்பத்தி பாதிக்கப்பட்டு தொழிற்சாலைகள் மூடப்பட்டுவருவதால், வேலைவாய்ப்பின்மை பிரச்னை தலைவிரித்தாடுகிறது. இந்தியச் சந்தையில் விற்பனை 30-40 விழுக்காடு வரை குறைந்துள்ளது. பண்டிகை நாளான தீபாவளியன்று அமைதி நிலவிவருகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சிதம்பரம் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி!