ETV Bharat / bharat

டெல்லி நிஜாமுதீன் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மீது சிவசேனா சாடல்!

author img

By

Published : Apr 3, 2020, 6:02 PM IST

மும்பை: இஸ்லாமிய நாடுகளே மசூதிகளை மூடிய நிலையில் டெல்லியில் மத நிகழ்ச்சி நடத்தியது மனிதாபிமானமற்ற செயல் என சிவசேனா விமர்சித்துள்ளது.

vNizamuddin gathering  Tablighi Jamaat  Sena slams Tablighi  Saamana editorial  coronavirus  COVID-19  டெல்லி நிஜாமுதீன் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மீது சிவசேனா சாடல்!  டெல்லி நிஜாமுதீன் நிகழ்ச்சி, சிவசேனா, சாம்னா, கரோனா பரவல், அச்சம், கோவிட்19, வைரஸ் பாதிப்பு, மகாராஷ்டிரா  Shiv Sena
Nizamuddin gathering Tablighi Jamaat Sena slams Tablighi Saamana editorial coronavirus COVID-19 டெல்லி நிஜாமுதீன் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மீது சிவசேனா சாடல்! டெல்லி நிஜாமுதீன் நிகழ்ச்சி, சிவசேனா, சாம்னா, கரோனா பரவல், அச்சம், கோவிட்19, வைரஸ் பாதிப்பு, மகாராஷ்டிரா Shiv Sena

டெல்லி நிஜாமுதீன் கூட்டத்தை பெரும் அவமதிப்பு என கூறியுள்ள சிவசேனா, நாட்டில் கரோனா வைரஸ் தொற்று பரவ இது ஆதாரமாகிவிட்டது எனவும் விமர்சித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில், “இஸ்லாமிய நாடுகளில் உள்ள மசூதிகள் மூடப்பட்டுள்ளன. மக்கள் தங்கள் வீட்டில் நமாஸ் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மக்கா மற்றும் மதீனாவிலும் கூட அனைத்துவித மத நடவடிக்கைகளும் ரத்து செய்யப்பட்டு, மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லி நிஜாமுதீன் கூட்டத்தில் 22 மாநிலங்களைச் சேர்ந்த ஐந்தாயிரம் பேர் மற்றும் எட்டு வெளிநாடுகளைச் சேர்ந்த இரண்டாயிரம் பேர் என மொத்தம் ஏழாயிரம் (7,000) பேர் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 380 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியை முன்னதாகவே நிறுத்தியிருக்க வேண்டும். இவ்வாறு நடந்திருந்தால் இஸ்லாமியர்கள் ஆதரவளித்திருப்பார்கள். ஏனெனில் இது மதம் சார்ந்த விவகாரம் அல்ல. நாட்டின் நலன் சார்ந்த பிரச்னை. பூட்டுதலை மீறுவது என்பது அடுத்தவர் வாழ்க்கையுடன் விளையாடுவது போன்றது ஆகும். தற்போது இந்தப் பிரச்னை இந்து முஸ்லிம் அரசியல் விளையாட்டாளர்களின் கைகளில் உள்ளது” என அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'கரோனாவால் இறப்பவர்கள் தியாகிகள்'- அசாதுதீன் ஓவைசி ட்வீட்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.