மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கடந்த மாதம் நாடாளுமன்ற நிலைக்குழுவின் வெளியுறவுத்துறை உறுப்பினர் பதவியை திருவனந்தபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவருமான சசி தரூருக்கு வழங்குவதாகக் கூறினார்.
அதை ஏற்க மறுத்து சசி தரூர் அளித்த விளக்கத்தில், 'தம்மை நாடாளுமன்ற நிலைக்குழுவின் வெளியுறவுத்துறை கமிட்டியின் உறுப்பினராக தேர்வு செய்த சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு நன்றி. தமக்கு அளித்த நாடாளுமன்ற நிலைக்குழுவின் தகவல் தொழில் நுட்பக் கமிட்டியின் தலைவர் பொறுப்பு சுமையே அதிகமாக உள்ளது' என்று தெரிவித்தார்.
மேலும் வெளியுறவுத்துறை கமிட்டியின் முன்னாள் தலைவராக இருந்த சசி தரூரை அத்துறையில் மீண்டும் தலைவராக நியமிக்காமல் உறுப்பினர் பதவி அளித்ததால், அதனை ஏற்றுக்கொள்ள அவர் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவர்களாக எதிர்க்கட்சிகள் இருந்து வரும் பாரம்பரியத்தை பாஜக, முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் செயல்பட்டுவருகிறது என்றும் குற்றம்சாட்டினார்.
மேலும் படிக்க: 49 பேர் மீது தேச துரோக வழக்கு - பிரதமருக்கு கடிதம் எழுதிய சசி தரூர்
'இது அது இல்ல ! ஆனா நாங்களும் வெளிநாட்டில் கெத்து தான்' - காங்கிரஸ் தலைவர்