கர்நாடக மாநிலம், மங்களூரு கடற்கரை பகுதியில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் டெக்னாலஜி(என்ஐடி) அருகே நேற்றுமாலை திமிங்கல சுறா ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. இதையறிந்த கடல்சார் ஆய்வு மைய அலுவலர்கள் கிரேன் உதவியோடு சுறாவை ஆய்வு மையத்திற்கு கொண்டு இறந்ததற்கான காரணம் குறித்து ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர்.
![திமிங்கல சுறா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3703021_qw.jpg)
இந்த திமிங்கல சுறாவைக் காண அப்பகுதியில் ஏராளமானோர் கூடியதால் பரபரப்பு நிலவியது.