ETV Bharat / bharat

சிஏஏ எதிர்ப்பு செயற்பாட்டாளர் ஷர்ஜீல் இமாம் டெல்லி போலீஸிடம் ஒப்படைப்பு - சிஏஏ எதிர்ப்பு ஆர்வலர் ஷர்ஜீல் இமாம் கைது

டெல்லி: பிகார் காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட சிஏஏ எதிர்ப்பு செயற்பாட்டாளர் ஷர்ஜீல் இமான்ம் டெல்லி காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

Sharjeel Imam
Sharjeel Imam
author img

By

Published : Jan 29, 2020, 2:12 PM IST

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்துவருகின்றன. இதற்கிடையே டெல்லியில் உள்ள ஜாமியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் டிசம்பர் 13ஆம் தேதியன்று குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஏதிராக போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தின்போது, போராட்ட ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவனான ஷர்ஜீல் இமாம் என்பவர் தேசத்திற்கு விரோதமாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் அவர், "5 லட்சம் மக்கள் ஒருங்கிணைக்கப்பட்டால், நாம் இந்தியாவிலிருந்து வடகிழக்கு மாநிலங்களை நிரந்தரமாக பிரித்துவிடலாம். அப்படி நடக்காவிட்டாலும் குறைந்தது ஒன்றரை மாதங்களாவது பிரித்துவிடலாம். சாலைகளையும் தண்டவாளங்களையும் உடைத்து நொறுக்குவோம். அப்போதுதான் நம்முடைய பேச்சை இவர்கள் கேட்பார்கள்" என்று பேசியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகிவருகிறது.

இதையடுத்து, குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பகிர்ந்ததாக, டெல்லி காவல் துறையினர் மாணவர் ஷர்ஜீல் இமாம் மீது தேசத்துரோக வழக்குப் பதிவுசெய்து அவரைத் தீவிரமாக தேடிவந்தனர். முன்னதாக உத்தரப் பிரதேசம், பிகார் காவல் துறையினர் ஒன்றிணைந்து, மும்பை, பாட்னா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் இமாமை தேடிவந்தனர். மேலும் அவரது சகோதரரையும் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் பிகாரில் உள்ள ககோ என்ற பகுதியில் நேற்று ஷர்ஜீல் இமாம் கைது செய்யப்பட்டார். பின்னர் தலைமை நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு இமாமை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து பிகார் காவல் துறையினர் கைது செய்யப்பட்ட ஷர்ஜீல் இமாமை டெல்லி காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க: பாஜகவில் இணைந்தார் சாய்னா!

Intro:Body:

https://twitter.com/ANI/status/1222344367462965248

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.