நாடாளுமன்றத்தேர்தலை முன்னிட்டு மதேபுரா மக்களவைத்தொகுதியில் ஐக்கிய ஜனதா தளக்கட்சியின் முன்னாள் தலைவர் சரத் யாதவ் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில்,
"நான் பல முறை அமைச்சராக இருந்துள்ளேன். சமீபத்தில் அமைச்சராகும் வாய்ப்பை நழுவ விட்டேன். நரேந்திர மோடி மீண்டும் வெற்றி பெற்றால் நான் அனைத்தையும் இழந்து விடுவேன். அவரால் ஜெயிலுக்கு அனுப்பபடுவேன் அல்லது கொல்லப்படுவேன்.
பாஜக அரசுக்கு எதிராக பேசுபவர்கள் பலிகிடா ஆக்கப்படுகிறார்கள். தற்போதைய அரசாங்கத்தையும், அதன் கொள்கைகளையும் விமர்சிப்பவர்கள் கொல்லப்படுகிறார்கள்" எனக் கூறினார்.
இதனிடையே பாஜகவிற்கு எதிரான சரத்யாதவின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.