மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த மாநிலங்களில் உள்ள மற்ற கட்சித் தலைவர்கள் தொடர்ந்து சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பாஜகவில் இணைந்து-வருகின்றனர். இது எதிர்க்கட்சிகளுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் இடையே மகாராஷ்டிராவில் உள்ள 240 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் உடன்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிற கட்சிகளுடனும் பேசிவருகிறோம். அடுத்த 8-10 நாட்களில் கூட்டணியின் விவரம் முழுமையாக தெரிந்துவிடும். மகாராஷ்டிராவில் நடக்கவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, மற்ற கட்சிகளைச் சேர்ந்தவர்களை பாஜக வலுகட்டாயமாக தன் கட்சியில் இணைத்துவருகிறது. இச்செயலை அக்கட்சி நாடு முழுவதும், செய்துவருகிறது" என்றார்.