ETV Bharat / bharat

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தாமரை மலரும்- சையது ஷாநவாஸ் ஹூசைன் - உழவர் சங்கங்கள்

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தாமரை மலர்ந்துள்ளது, இனி மேற்கு வங்கத்திலும் மலரும், அன்று தாய், மண், மக்கள் எனப் பேசிக்கொண்டிருந்த மம்தா பானர்ஜி இன்று துப்பாக்கி, தோட்டாக்கள், வெடிப்பொருள்கள் எனப் பேசுகிறார் என்று ஷாநவாஸ் ஹூசைன் கூறினார்.

Shahnawaz Hussain  Shahnawaz Hussain on Mamata  Shahnawaz Hussain takes dig at Mamata  Bengal  Bengal elections  Shahnawaz Hussain visits Ajmer  West Bengal Chief Minister  Mamata Banerjee  சையது ஷாநவாஸ் ஹூசைன்  அஜ்மீர்  மம்தா பானர்ஜி  பாஜக  உழவர் சங்கங்கள்  காஷ்மீர்-கன்னியாகுமரி வரை தாமரை

author img

By

Published : Jan 24, 2021, 3:05 AM IST

அஜ்மீர்: பாஜக தேசிய செய்தித்தொடர்பாளர் சையது ஷாநவாஸ் ஹூசைன் ராஜஸ்தானில் ஆஜ்மீரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கவ்ஜா மொய்னுதீன் சிஸ்டி தர்காவில் பிரார்த்தனை நடத்தினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தாய், மண், மக்கள் என்று பேசிக்கொண்டிருந்த மம்தா பானர்ஜி தற்போது துப்பாக்கி, தோட்டா, வெடிப்பொருள்கள் எனப் பேசுகிறார். நாடு முழுக்க தேர்தல்களில் பாஜக வெற்றிபெற்றுவருகிறது. சமீபத்தில் காஷ்மீரில் நடந்த தேர்தலில் கூட பாஜக வெற்றி பெற்றது.

காஷ்மீர்-கன்னியாகுமரி வரை தாமரை மலரும். மேற்கு வங்கத்திலும் சாத்தியமாகும். மேற்கு வங்கத்தில் பெரிய அளவிலான வெற்றியை பெறுவோம். கேரளத்திலும் வெல்வோம்” என்றார். இதையடுத்து உழவர்கள் போராட்டம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஷாநவாஸ், “மத்திய அரசு, உழவர் சங்கங்கள் இடையே பேச்சுவார்த்தை சரியான திசையில் செல்கிறது. விரைவில் தீர்வு கிடைக்கும்” என்றார்.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தாமரை மலரும்- சையது ஷாநவாஸ் ஹூசைன்

இதையும் படிங்க: 'சிவசேனா உள்பட பாஜக எதிர்ப்பு கட்சிகள் தேசிய அளவில் ஒன்றிணைய வேண்டும்'- சாம்னா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.