உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக முன்னாள் மக்களவை உறுப்பினரும் மத்திய முன்னாள் அமைச்சருமான சின்மயானந்த் மீது சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
இவ்விவகாரம் தொடர்பாக சிறப்புப் புலனாய்வுக் குழு நீதிமன்ற கண்காணிப்பில் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது.
இந்த வழக்கில் புதிய திருப்பமாக சட்டக்கல்லூரி மாணவி, சின்மயானந்திடமிருந்து பணம் பறிக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சட்டக்கல்லூரி மாணவி கடத்தப்பட்டதாகக் கூறப்பட்டுவந்த நிலையில் அவர் தனது ஆண் நண்பர்களுடன் இணைந்து தப்பிக்க முயற்சித்ததும் தெரியவந்துள்ளது.
தற்போது சிறப்புப் புலனாய்வு அமைப்பின் தலைவர் ஐஜி நவீன் அரோரா தலைமையிலான குழுவினர் சட்டக்கல்லூரி மாணவி மற்றும் அவரது மூன்று நண்பர்களையும் கைது செய்துள்ளனர். சின்மயானந்த்துக்கு எதிராக வீடியோ ஆதாரங்கள் இருப்பதாகவும், அதை வெளியிடக்கூடாது என்றால் ஐந்து கோடி ரூபாய் பணம் தரும்படியும் இவர்கள் மிரட்டியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சட்டக்கல்லூரி மாணவியை கைது செய்த காவல் துறையினர் அவரை மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் சென்று பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். செவ்வாய்க்கிழமை காவலில் எடுக்கப்பட்ட அந்த மாணவியை கைது செய்ய நீதிமன்றம் தடைவிதித்ததையடுத்து சிறப்புப் புலனாய்வு அமைப்பு அவரை விடுவித்தது.
பாலியல் புகார் விவகாரம் பாஜக முன்னாள் எம்.பி. சுவாமி சின்மயானந்த் கைது