குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவு போன்றவற்றை அரசு அறிவித்து சுமார் மூன்று மாதங்கள் ஆன நிலையில் நாட்டின் பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். இந்நிலையில் ஷாஹீன் பாக் போராட்டத்தில் கலந்துகொண்ட இஸ்லாமிய பெண்கள் இந்தச் சட்டம் ரத்து செய்யப்படும்வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.
மேலும் டெல்லியில் நடைப்பெற்ற வன்முறை சம்பவத்தில் நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
'ஜாஃபராபாத், மௌஜ்பூர், ஷிவ் விஹார் போன்ற இடங்களில் நடைபெற்ற கலவரங்களில் நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும். மேலும் கலவரத்தின்போது உத்தரப் பிரதேசத்திலிருந்து டெல்லிக்கு மக்கள் வந்தனர் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும்' என்று போராட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி நடைபெற்ற வன்முறையில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்தக் கலவரத்தில் பொது சொத்துக்களும் சேதாரம் அடைந்தன.
இந்நிலையில் கொரோனா தொற்று பரவிவரும் நிலையில், கைகளை சுத்திகரிக்கும் கிருமி நாசினிகளையும், முகமூடிகளையும் பயன்படுத்துவதாக போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க... 'பிள்ளைகளை இழக்கும் வலி பிரதமருக்கு தெரியுமா' - ஷாகீன் பாக் மூதாட்டி ஆதங்கம்