டெல்லி: மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் ஆகியோருடன் மத்திய உள்துறை அமித்ஷா மேற்கொண்ட தொலைபேசி உரையாடலில், மேற்குவங்கத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
ஐந்து சூறாவளிக்கு சமமான ஆம்பன் புயல் தனது பலத்தை அதிகரித்து வருகிறது என்றும் நாளை மாலை தாமதமாக வங்க கடற்கரையை அடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதானல், 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்படுகிறார்கள்.
இது தொடர்பாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மேற்கொண்ட தொலைபேசி உரையாடலில், மேற்குவங்கத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
தீவிரமடையும் ஆம்பன் புயல்: துரித தகவல்கள் உடனுக்குடன்...
தொடர்ந்து, மத்திய அரசு தங்களுடன் இருப்பதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா, மம்தாவுக்கு உறுதியளித்துள்ளார். மேற்குவங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சமீபத்தில் மாநிலத்தில் அரசியல் செய்வதாக மத்திய அரசை மம்தா கடுமையாக விமர்சித்து வருகிறார்.
தேசிய நெருக்கடி கண்காணிப்புக் குழுவை சந்திக்கும் அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா, தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் பாதுகாப்புப் படைகள், மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்புத் துறைகள் எவ்வாறு அவசரக்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளன என்பது குறித்து விவாதிக்க உள்ளார்.
‘ஒரு நாடு ஒரே ரேசன் கார்டு’ திட்டத்தின் பயன்களும் சவால்களும்!
முன்னதாக, நேற்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் மற்றும் உயர்மட்ட அலுவலர்களுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.