சுதந்திரத்தைத் தீவிரவாத முறையில் தான் அடைய முடியும் என சொன்னவர் பாலகங்காதர திலகர். காங்கிரஸ் கட்சி மிதவாதி, பயங்கரவாதி என இரு குழுக்களாக பிரிந்தபோது ஆயுதம் ஏந்திய குழுவுக்கு தலைமை தாங்கியவர் திலகர். சுதந்திரம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன் என்ற முழக்கத்திற்குச் சொந்தகாரரான இவரின் 100ஆவது நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 1) நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
இதன் ஒரு அங்கமாக, இந்திய கலாசார உறவுகளுக்கான கவுன்சில் சார்பில் கருத்தரங்கு நடைபெற்றது. அதில், உள்துறை அமைச்சர் அமித் ஷா வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் பங்கேற்று, திலகரின் சொற்கள் இந்திய சுதந்திர வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை என தெரிவித்தார்.
தற்சார்பு இந்தியா திட்டத்திற்கு முக்கியத்துவம் தந்து வரும் காலத்தில், சுதந்திரத்தை அடைவதில் முக்கிய பங்காற்றிய திலகரின் பங்கு குறித்து பேசிய அமித் ஷா, "சுதந்திரம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன் என, 19ஆம் நூற்றாண்டிலேயே சூளுரைத்து அதற்காக தனது வாழ்நாளையே செலவழித்தவர் திலகர். இந்தச் சொற்கள் இந்திய சுதந்திர வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை" என்றார்.
இதையும் படிங்க: கல்வி அமைப்பை உலக தரத்தில் நவீனமயமாக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது - மோடி