கௌகாத்தி: அசாம் மாநிலத்தில் நெருங்கிவரும் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அசாம் மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று (டிசம். 26) இரவு அசாம் மாநில பாஜக தலைவர்களுடனும் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா அசாம் மாநில முதலமைச்சர் சர்வானந்த சோனாவால் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமன்தா பிஸ்வா சர்மா ஆகியோருடன் அசாமின் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான நீலாச்சல் மலைப்பகுதியில் அமைந்துள்ள சக்திபீட காமாக்யா கோயிலுக்குச் சென்றார். அங்கு, அவர் கோயிலின் கருவறைக்குள் சென்று தரிசனம் செய்தார். முதலமைச்சரும், அமைச்சரும் வெளியில் நின்று தரிசனம் செய்ததாகக் கூறப்படுகிறது.
அவர் தனது மூன்று நாள் பயணத்தில் மணிப்பூருக்கு செல்வதற்கு முன் இக்கோயிலில் தரிசனம் செய்ததாக அலுவலர்கள் தெரிவித்தனர். மணிப்பூர் செல்லும் அமித்ஷா அங்கு ஏழு முக்கிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவுள்ளார்.
இதையும் படிங்க: அஸ்ஸாம் வந்தடைந்த அமித் ஷாவிற்கு உற்சாக வரவேற்பு