ETV Bharat / bharat

பிகார் தேர்தல்: வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க பாஜக அவசர கூட்டம்

author img

By

Published : Oct 5, 2020, 5:59 PM IST

டெல்லி: பிகார் தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா வீட்டில் அவசர கூட்டம் நடைபெற்றுவருகிறது.

பாஜக
பாஜக

பிகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் மூன்று கட்டமாக நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி மொத்தம் 243 தொகுதிகளுக்கு அக்டோபர் 28, நவம்பர் 3, நவம்பர் 7 ஆகிய நாட்களில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டு தேர்தல்களில் பதிவான வாக்குகள் நவம்பர் 10ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.

இந்நிலையில், வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் நோக்கில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா வீட்டில் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக மேலிட பொறுப்பாளர் புபேந்திர யாதவ், பிகார் தேர்தல் பொறுப்பாளர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டம் முடிவடைந்ததைத் தொடர்ந்து முதற்கட்ட தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பெயரை பாஜக வெளியிட உள்ளது. ஐக்கிய ஜனதா தளம், பாஜக ஆகிய கட்சிகள் ஒரே எண்ணிக்கையிலான இடங்களில் போட்டியிட உள்ளன. இந்த கூட்டணியில் விஐபி கட்சியும் சேர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக, நேற்று பாஜகவின் மத்திய தேர்தல் குழுவின் கூட்டம் நடைபெற்றது. பிகார் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பெயரை தேர்ந்தெடுக்க இக்கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் கலந்து கொண்டனர். வேட்பாளர்களின் பலம் பலவீனங்கள் ஆகியவை குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. 243 தொகுதிகள் கொண்ட பிகாரில் அக்டோபர் எட்டாம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.