ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தந்திகொண்டா காட் சாலையில், வெங்கடேஸ்வரஸ்வாமி கோயில் அருகே வேன் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இன்று(அக்.30) அதிகாலை 3.30 மணியளவில் திருமண விழா ஒன்றில் கலந்து கொண்டு திரும்புகையில், பிரேக் செயலிழந்ததால் வேன் மலையிலிருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக ராஜமுந்திரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இறந்தவர்கள் கோகாவரம் மண்டலத்தில் உள்ள தாகர்பேலம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என, முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்துகுறித்து காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க : வேல் யாத்திரை பெயரில் மதக்கலவரத்தைத் தூண்ட சதி - பாஜக மீது திருமா பாய்ச்சல்!