ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம் குல்காமில் உள்ள சாலையில் நேற்று காலை பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் 10 பேர் சிக்கி கொண்டதாக மீட்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து விரைந்து வந்த மீட்பு பணியினர் பல மணிநேர போரட்டத்திற்கு பின்னர் 7 உடல்களை கைப்பற்றினர். இதில், அம்மாநில காவல் துறையைச் சேர்ந்தவர்கள் ஐந்து பேர். இதைத் தொடர்ந்து மீட்புப் பணியினர் மீதியுள்ள மூன்று பேரின் உடலை தீவிரமாக தேடிவருகின்றனர்.
ஜம்மு மற்றும் காஷ்மீரில் தொடர்ந்து நான்காவது நாளாக கடும் பனிப்பொழிவு ஏற்படுவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.