இந்தியப் பங்குச்சந்தை தொடக்கத்திலேயே மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2,612 புள்ளிகள் சரிந்து 27,365.89 எனவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 750 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 7,945.70 எனவும் வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளது.
கரோனா வைரஸ் தோற்றால் 2008ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியப் பங்குச்சந்தை இப்படி ஒரு கடும் சரிவை சந்தித்தது இதுவே முதல் முறையாகும்.
மேலும் கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவருவதால் உலக வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்படும் என பொருளாதார வல்லுவநர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் இந்தியப் பங்குச்சந்தை மேலும் சரியக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கரோனா பாதிப்புக்கு உதவிக்கரம் நீட்டும் ஆனந்த் மகேந்திரா