ETV Bharat / bharat

விமான போக்குவரத்து இயக்குநரக பாதுகாப்புத் துறை தலைவராக எம்.ஏ. கணபதி நியமனம்

விமான போக்குவரத்து இயக்குநரக பாதுகாப்பு ஆணையத்தின் தலைவராக எம்.ஏ. கணபதி நியமிக்கப்பட்டுள்ளார்.

bcas
bcas
author img

By

Published : Oct 7, 2020, 4:56 PM IST

இந்த உத்தரவை நியமனங்களுக்கான மத்திய கேபினட் குழு வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னர் இந்தப் பொறுப்பிலிருந்த ராகேஷ் அஸ்தானா எல்லைப் பாதுகாப்புத் துறை தலைவராக கடந்த ஆகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து இந்தப் பதவி காலியாக இருந்த நிலையில், தற்போது கணபதி நியமிக்கப்பட்டுள்ளார். 1986ஆம் ஆண்டு ஐபிஎஸ் ஆக பொறுப்பேற்ற கணபதியின் ஓய்வுக் காலம் 2024ஆம் ஆண்டு பிப்ரவரி வரை உள்ளது.

இதையடுத்து மறு உத்தரவு வரும்வரை இந்தப் பதவியில் தொடர்ந்து இருப்பார் எனக் கூறப்பட்டுள்ளது. விமான போக்குவரத் துறை அமைச்சகத்தின் பரிந்துரையின்பேரில் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நியமனங்களுக்கான கேபினட் குழு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: ஸ்டேட் வங்கி தலைவராக தினேஷ் குமார் காரா நியமனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.