உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியில் தற்போது 432 வீரர்கள் பயிற்சி முடித்துள்ளனர். அவர்களுக்கான வழி அனுப்பிவைப்பு விழா நேற்று (ஜூன் 13) நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக பாதுகாப்பு படை தளபதி நரவனே பங்குபெற்றார்.
அந்த விழாவில் வீரர்களின் அணிவகுப்பு சிறப்பாக நடைபெற்றது. கரோனா ஊரடங்கு காரணமாக அதைக் காண வீரர்களின் பெற்றோர் யாரும் வர அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிகழ்ச்சியில் பல முக்கிய நிகழ்வுகளும் நடைபெறவில்லை. இந்த நிகழ்ச்சி முழுவதையும் முதல்முறையாக இந்திய பாதுகாப்பு படையினரின் யூடியூப் சேனலில் ஒளிபரப்பப்பட்டது.
பயிற்சி முடித்த 423 வீரர்களில் 333 பேர் ராணுவத்தில் சேரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராணுவ அகாடமியில் இந்திய வீரர்கள் உள்பட காமன்வெல்த் பட்டியலில் உள்ள நாடுகளின் வீரர்களும் சேர்த்து 62 ஆயிரத்து 139 பேருக்கு இதுவரை பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அமெரிக்க விமானப் படை தளபதியாக கறுப்பினத்தவர் தேர்வு!