பாலியல் தொழில் செய்து வந்த ஐந்து பெண்கள், அரசியல்வாதிகள், அரசு அலுவலர்கள் ஆகியோருடன் உல்லாசமாக இருக்கும் வீடியோவை வைத்து பணம் கேட்டு மிரட்டி சம்பாதித்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தற்போது மத்தியப் பிரதேச காவல் அலுவலர் ஷர்மா கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், மாநில காவல்துறை அலுவலர்கள் இந்த வழக்கை விசாரித்தால் பல உண்மைகள் வெளிவராது. இதனை தனி அதிகாரம் பெற்ற சிறப்பு புலனாய்வு குழு விசாரித்தால் மட்டுமே உண்மைகள் வெளிவரும் என தெரிவித்துள்ளார்.
மேலும், அவர்களிடமிருந்து கைப்பற்ற 92 வீடியோக்களில் பல முக்கிய அரசியல் புள்ளிகளும், காவல்துறை அலுவலர்களும், அரசு அலுவலர்களும் சிக்கியுள்ளனர் என கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே: பாலியல் தொழிலாளிகளுடன் அரசியல்வாதிகளின் 'இன்ப களியாட்டம்' காணொலி: முடக்கப்பட்ட வங்கிக் கணக்குகள்!