கேரளா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், குஜராத் உள்ளிட்ட 14 மாநிலங்களில் இன்று மக்களவைத் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.
இதில், கர்நாடகாவின் ஹவேலி தொகுதிக்குட்பட்ட கட்டாக் (Gadag) பகுதியைச் சேர்ந்த நாகம்மா என்னும் 110 வயது மூதாட்டியும், சிமோகா (Simoga) தொகுதிக்குட்பட்ட சிவமொக்கா ( Sivamogga) நகரைச் சேர்ந்த ருத்ரமா என்னும் 95 வயது மூதாட்டியும் தங்களது வயது முதிர்வை பொருட்படுத்தாது ஆர்வத்துடன் வந்து தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.
இதேபோன்று, கோப்பல் (Koppal) தொகுதியில் உள்ள கோப்பல் மாவட்டத்தின் பெட்டகேரி கிராமத்தைச் சேர்ந்த சங்ரமா லக்ஷ்மி என்னும் 106 வயது மூதாட்டியும், தார்வாத் (Dharwad) மக்களவைத் தொகுதியில் 87 வயதான மூதாட்டியும் வந்து தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.
இவர்களுக்கு சக்கர நாற்காலி கொடுத்து உதவுமாறு தேர்தல் அலுவலர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டும், அவை அளிக்கப்படவில்லை என்பது வருத்தத்திற்குரிய ஒன்று.