ETV Bharat / bharat

குடிபெயர் தொழிலாளர் விவகாரம்; ரயில்வே அமைச்சர் - மகாராஷ்டிரா அரசு மோதல்

டெல்லி: குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஷார்மிக் ரயில்கள் அனுப்பும் விவகாரம் தொடர்பாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் மகாராஷ்டிரா அரசுக்கு இடையே பெரும் வார்த்தை மோதல் நடைபெற்று வருகிறது.

Ganesh
Ganesh
author img

By

Published : May 25, 2020, 10:38 PM IST

கரோனா லாக்டவுனால் பாதிப்புக்குள்ளான குடிபெயர்ந்த தொழிலாளர்களை தங்களின் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல ஷார்மிக் சிறப்பு ரயில்களை ரயில்வே அமைச்சகம் இயக்கிவருகிறது. நாட்டில் அதிக குடிபெயர்ந்த தொழிலாளர்களைக் கொண்ட மாநிலமான மகாராஷ்டிரா அரசுக்கும் ரயில்வே அமைச்சகத்துக்கும் இந்த விவகாரம் தொடர்பாக உரசல் ஏற்பட்டுள்ளது.

ரயில்வே அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள ரயில்கள் போதுமானதாக இல்லை எனவும், அவை முறையான சேவைகளை வழங்கவில்லை எனவும் மகாராஷ்டிரா அரசு புகார் அளித்தது. மகாராஷ்டிரா அரசு தொழிலாளர்களின் விவரங்களை தயார் செய்து முறையாக கொடுத்தால் உடனடியாக 125 சிறப்பு ரயில்களை இயக்கத் தாயர் என ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் பதிலடி தரும் விதத்தில் தெரிவித்தார்.

பியூஷ் கோயலுக்கு பதில் அளிக்கும் விதமாக சிவசேனா மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ராவத் கருத்து தெரிவித்துள்ளார். முன்னதாக, ரயில்வே அமைச்சகம் இயக்கிய ரயில் நடைமுறை கோளாறு காரணமாக செல்ல வேண்டிய பகுதிகளுக்கு நேரடியாகச் செல்லாமல், சுமார் 25 மணிநேரம் தாமதாக சென்று சேர்கின்றன. எனவே, ரயில்வே அமைச்சகம் உரிய நேரத்தில் உரிய சேவை வழங்குவதை கவனம் செலுத்த வேண்டும் என சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக ரயில்வே அமைச்சகம் - மகாராஷ்டிரா இடையே தொடர் வார்த்தைப் போர் நடைபெற்றுவருகிறது.

இதையும் படிங்க: கேரள அரசின் உதவியை நாடும் மகாராஷ்டிரா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.