ETV Bharat / bharat

'சிவசேனா உள்பட பாஜக எதிர்ப்பு கட்சிகள் தேசிய அளவில் ஒன்றிணைய வேண்டும்'- சாம்னா

சிவசேனா உள்பட பாஜக எதிர்ப்பு கட்சிகள் தேசிய அளவில், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் கீழ் இணைய வேண்டும் என சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடாக சாம்னா தலையங்கம் வெளியிட்டுள்ளது.

Saamana under UPA Saamana advises ant-BJP parties to join UPA Leadership issue in UPA Stronghold of NDA Sanjay Raut on UPA பாஜக எதிர்ப்பு கட்சிகள் சிவசேனா காங்கிரஸ் ராகுல் காந்தி அமித் ஷா நரேந்திர மோடி சாம்னா மம்தா பானர்ஜி saamna sena anti bjp விவசாயிகள் போராட்டம் கமல்நாத் அரசு கவிழ்ப்பு காங்கிரஸ் எதிர்காலம்

author img

By

Published : Dec 26, 2020, 3:57 PM IST

மும்பை: சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் வெளியாகியுள்ள தலையங்கத்தில், “பாஜக எதிர்ப்பு கட்சிகள் தேசிய அளவில் ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், “விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை, அலட்சிய மனப்போக்குடன் அக்கறையின்றி காணப்படுகின்றனர். பிரதான எதிர்க்கட்சி (காங்கிரஸ்) அதன் தலைமை பிரச்னை குறித்து ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

விவசாயிகள் போராட்டம்

மத்திய அரசின் அலட்சியத்துக்கு சிதைந்துபோன, பலவீனமான எதிர்க்கட்சிதான் காரணம். பயனற்ற எதிர்ப்பு ஒருபோதும் பலன் தராது. ராகுல் காந்தி தனித்த போராட்டத்தை நடத்துகிறார்.

எனினும் அதில் ஏதோ ஒரு குறை உள்ளது. காங்கிரஸின் தற்போதைய நிலைமை சுழியம் (பூஜ்யம்) போன்று காணப்படுகிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர்களும் விவசாயிகளின் போராட்டத்தை பெரிதாக எடுத்துக்கொண்டதாக தெரியவில்லை.

பாஜக எதிர்ப்பு கட்சிகள்

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஒரு தனித்த ஆளுமை. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தனித்து நின்று ஒரு போரை நடத்துகிறார். இந்த நேரத்தில் நாட்டின் எதிர்க்கட்சிகள் அவருடன் நிற்க வேண்டும். மம்தா பானர்ஜி பவாரை மட்டுமே தொடர்பு கொண்டுள்ளார். அவர் வங்காளத்திற்கு செல்வார். ஆனால் காங்கிரஸின் தலைமையில் இது செய்யப்பட வேண்டும்.

திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா, அகாலிதளம், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி அகிலேஷ் யாதவ், ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், தெலங்கானாவைச் சேர்ந்த கே சந்திரசேகர் ராவ், ஒடிசாவின் நவீன் பட்நாயக், கர்நாடகாவின் ஹெச்.டி குமாரசாமி ஆகியோரும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் சேர வேண்டும்.

கமல்நாத் அரசு கவிழ்ப்பு

இவர்கள் அனைவரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இணையாவிட்டால், எதிர்க்கட்சியால் ஒரு வலிமையான திட்டத்தை வழங்க முடியாது. பிரியங்கா காந்தி வத்ரா டெல்லியில் கைது செய்யப்பட்டார்.

ராகுல் காந்தி பாஜகவால் பகிரங்கமாக கேலி செய்யப்பட்டார்; மகாராஷ்டிராவில் தாக்கரே அரசாங்கம் செயல்பட அனுமதிக்கப்படவில்லை. மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் அரசை கவிழ்ப்பதில் பிரதமர் கருவியாக இருந்தார் என்று பேச்சு எழுகிறது.

காங்கிரஸ் எதிர்காலம்

இவை அனைத்தும் ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. இந்த நிலைமை இன்னமும் மோசமடையாமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது. அகமது படேல், மோதிலால் வோரா போன்ற மூத்த காங்கிரஸ் தலைவர்கள் இப்போது இல்லை. காங்கிரஸை யார் வழிநடத்துவார்கள், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் எதிர்காலம் என்ன என்பதில் தெளிவு இல்லை.

தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்.டி.ஏ) பாஜகவைத் தவிர வேறு எந்த கட்சியும் இல்லை என்பது போல், ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலும் காங்கிரஸை தவிர வேறு யாரும் இல்லை என்ற நிலைமை உள்ளது.

எச்சரிக்கை

ஆனால் பாஜக முழுமையான அதிகாரத்தில் உள்ளது, அவர்களுக்கு நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா என சக்திவாய்ந்த தலைமை உள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு யாரும் இல்லை.

இந்த விஷயங்களில் காங்கிரஸ் ஒரு தீவிரமான சிந்தனையை வழங்காவிட்டால், அனைவரின் எதிர்காலமும் கடினமாக இருக்கும். இந்த எச்சரிக்கை மணிகள் தற்போது ஒலிக்க தொடங்கிவிட்டன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பிரதமர் மோடி சீக்கியர்களை நேசிப்பது உண்மையென்றால் விவசாயிகள் போராட வேண்டிய அவசியமில்லை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.