ETV Bharat / bharat

வெளிநாடுக்கு தப்பியோடிய நித்தியானந்தா - இறுக்கும் காவல் பிடி..... - சிறுமிகளை அடைத்து வைத்து சித்ரவதை

அகமதாபாத்: சிறுமிகளை கடத்தி சித்ரவதை செய்வதாக எழுந்த புகாரின் பேரில் நித்தியானந்தாவை கைது செய்ய காவல் துறையினர் சென்ற போது, அவர் வெளிநாடு தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

நித்தியானந்தா
author img

By

Published : Nov 22, 2019, 2:39 PM IST

பெங்களூருவை அடுத்த பிடதியை தலைமையிடமாகக் கொண்டு ’பரமஹம்ச நித்தியானந்த தியான பீடம்’ என்ற பெயரில் ஆசிரமம் நடத்தி வருபவர் நித்தியானந்தா . இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் இவரது ஆசிரமத்தின் கிளைகள் உள்ளன. குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் புறநகர் பகுதியான ஹிராபூரில் உள்ள கிளையின் சார்பில், அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வீடு எடுத்து 4 சிறுமிகளை தங்க வைத்து இருந்ததாகவும், நன்கொடை வசூலிக்க வைத்து அவர்களை சித்ரவதை செய்ததாகவும் புகார் எழுந்தது.

இந்த புகார் தொடர்பாக நித்தியானந்தா மற்றும் அவரது பெண் சீடர்களும், ஆசிரம நிர்வாகிகளுமான சாத்வி பிரன்பிரிய நந்தா, பிரியதத்வ ரித்தி கிரண் உள்ளிட்டோர் மீது அகமதாபாத் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

அவர்களில் சாத்வி பிரன்பிரிய நந்தா, பிரியதத்வ ரித்தி கிரண் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அந்த நான்கு சிறுமிகளும் மீட்கப்பட்டனர். அவர்களில் இருவர் பெங்களூருவைச் சேர்ந்த ஜனார்த்தன சர்மாவின் குழந்தைகள் ஆவர். அவர்கள் இருவரும் ஜனார்த்தன சர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

ஜனார்த்தன சர்மாவின் மூத்த மகள்களான லோக முத்ரா (வயது 21), நந்திதா சர்மா (18) ஆகியோர் இன்னும் அகமதாபாத் ஆசிரமத்தில் இருப்பதும் தெரியவந்துள்ளது.

தனது மகள்களை சந்திக்க ஆசிரம நிர்வாகிகள் அனுமதி வழங்க மறுத்ததால், ஜனார்த்தன சர்மா குஜராத் உயர் நீதிமன்ற உதவியை நாடினார். இதைத்தொடர்ந்துதான் அடுக்குமாடி குடியிருப்பில் சிறுமிகள் அடைத்து வைக்கப்பட்டு இருந்தது அம்பலமானது.

இந்நிலையில் அகமதாபாத் புறநகர் காவல் கண்காணிப்பாளர் ஆர்.வி.அசாரி நேற்று நிருபர்களிடம் கூறுகையில், நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டார். தேவைப்பட்டால் வெளிநாட்டில் இருக்கும் அவரை உரிய வழியில் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை குஜராத் காவல் துறையினர் மேற்கொள்வார்கள். இந்தியா திரும்பினால் அவரை நாங்கள் நிச்சயமாக கைது செய்வோம். நித்தியானந்தாவின் பெண் சீடர்கள் இருவரை கைது செய்து காவலில் வைத்து விசாரித்து வருகிறோம் என்றார்.

குஜராத் மாநில உள்துறை அமைச்சர் பிரதீப் சிங் ஜடேஜா கூறுகையில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட யாரையும் சட்ட நடவடிக்கையில் இருந்து தப்பவிட மாட்டோம் என்றார்.

இதற்கிடையே, நித்யானந்தா ஹிராபூர் கிராமத்தில் ஆசிரமம் நடத்தும் நிலம் டெல்லி பப்ளிக் பள்ளிக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.

சட்ட விதிமுறைகளை மீறி அந்த நிலத்தை ஆசிரமம் நடத்த குத்தகைக்கு கொடுத்ததாக டெல்லி பப்ளிக் பள்ளியின் முதல்வர் ஹிதே‌‌ஷ் புரியை காவல் துறையினர் கைது செய்ததாகவும், பின்னர் அவர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டதாகவும் அகமதாபாத் புறநகர் துணை காவல் கண்காணிப்பாளர் கே.டி.கமாரியா தெரிவித்தார்.

இதையும் படிங்க:நித்தியானந்தா என்னை கடத்தவில்லை- புது குண்டை தூக்கிப் போட்ட ’மா நித்தியானந்தா’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.