ETV Bharat / bharat

நாட்டின் பாதுகாப்புக்கு சுயசார்பு முக்கியம்

தற்சார்பு இந்திய பொருளாதார திட்டத்தை பிரதமர் மோடி நடைமுறைபடுத்திவரும் நிலையில் பாதுகாப்புத் துறையில் தற்சார்பின் தேவை குறித்து விளக்குகிறது இந்த கட்டுரை.

Defense
Defense
author img

By

Published : Aug 20, 2020, 10:27 PM IST

நமது நாட்டின் முதல் பிரதமரான பண்டிட் நேரு, நமது ராணுவ தேவைகளுக்காக இதர நாடுகளை சார்ந்திருப்பது என்பது தற்காலிகமானதாக இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். நீண்டகாலத்துக்கு நமக்கு தேவையான ராணுவ கருவிகளை நாமே அவசியம் தயாரிக்க வேண்டும் மற்றும் சுயசார்பு பெற்றிருக்க வேண்டும். தொடர்ந்து இறக்குமதி செய்து கொண்டிருப்பது நாட்டின் பாதுகாப்புக்கு அபாயம் என்றும், சுயசார்பு என்பதையும் , தற்காலிகம் என்ற வார்த்தையின் பொருளையும் அறிந்து கொள்ள முடியாத மெய்யறிவை கொண்டிருக்கும், ஆட்சியாளர்களின் குறுகிய கண்ணோட்டத்தால் பாதுகாப்பு போன்ற முக்கிய துறைகளில் இந்தியா பிறரை சார்ந்திருப்பது பல ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.

கடந்த இருபது ஆண்டுகளாக, எட்டு குழுக்கள் மற்றும் பணிக்குழுக்கள் தாக்கல் செய்த பல்வேறு அறிக்கைகளில் , உள்ளூர் அளவில் பாதுகாப்பு கருவிகளை உற்பத்தி செய்வதில் சுய சார்பை நோக்கி முன்னேற வேண்டும் என்று பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால், திட்டத்தை திறன் வாய்ந்த அளவில் அமல்படுத்துவதில் குறைபாடு காரணமாக, இந்த விஷயம் எங்கே தொடங்கியதோ அங்கேயே இருக்கிறது. ஆத்மநிர்பார் பாரத் என்று தலைப்பிடப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த அறிக்கையை நிதி அமைச்சர் அளித்தார்.

பாதுகாப்பு துறையில் இந்தியா சுயசார்பை அடையக்கூடிய பாதையைக் கொண்ட கொள்கை அறிக்கைகளாக அவை உருவாக்கப்பட்டிருந்தன. பாதுகாப்பு தயாரிப்புகள் ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கை கட்டமைப்பில், 2025-ம் ஆண்டுக்குள் 35 லட்சம் கோடி ரூபாய்க்கு ஏற்றுமதியும், 75 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உள்நாட்டு உற்பத்தி வருவாய் இலக்கையும் அடையும் குறிக்கோள்கள் இடம் பெற்றிருக்கின்றன.

பாதுகாப்பு துறையின் உள்நாட்டு தயாரிப்புகள் என்பது இப்போது 80 ஆயிரம் கோடியாக உள்ளது. இதில் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அரசின் ராணுவத் தொழிற்சாலைகளில் 63 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு தொடர்பான தயாரிப்புகளை முன்னெடுக்க 2001ம் ஆண்டில் இருந்து தனியார் நிறுவனங்களுக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டு வருகிறது. தனியார் நிறுவனங்கள் 17,000 கோடி ரூபாய் அளவுக்கு ராணுவ ஆயுதங்களை உற்பத்தி செய்துள்ளன.

உள்நாட்டு ராணுவ தொழிலுக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் உள்ளூரில் இருந்து கொள்முதல் செய்வதற்காக 52 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் அறிவித்தார். இறக்குமதி செய்வதில் இருந்து 101 ராணுவ பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட உள்ளது. அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு உள்ளூர் தொழிற்சாலைகளுக்கு 4 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டர்கள் தரப்பட உள்ளன. ஆத்மநிர்பார் குறிக்கோளை அடைவதற்கு இது போன்ற ஊக்கமளிக்கும் நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன.

உலக அளவிலான ராணுவபலத்தில் இந்தியா இரண்டாவது பெரிய ராணுவப் படைகளைக் கொண்டுள்ளது. இன்னொருபுறம் ராணுவ ஆயுதங்கள் மற்றும் கருவிகளை இறக்குமதி செய்யும் இரண்டாவது பெரிய இறக்குமதியாளராகவும் இந்தியா இருக்கிறது. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ராணுவ தளவாட பாகங்களின் தேவைக்காக ரஷ்யாவை சார்ந்திருப்பதன் மூலம், வெவ்வேறு காலகட்டங்களில் இந்தியா நெருக்கடிகளில் தள்ளப்பட்டது.

தரைப்படையின் முக்கியத்துவம் குறைந்து வரும் இந்த‌ தருணத்தில், புதிய மில்லியனிய போர் சூழலில் காற்று, கடற் பரப்பு விண்வெளி மற்றும் சைபர் துறைகள் உன்னத இடத்தைப் பெறுவதால் இவற்றில் எந்த ஒரு நாடும் தொடர்ந்து நீடித்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தனியார் துறைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டால், பாதுகாப்பு துறையில் சுயசார்பு என்பது தொடர்ந்து கானல் நீராகவே இருக்கும்.

அதே போல ஒன்பது பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் 41 ராணுவ தொழிற்சாலைகளையும் நம்பி உள்ளோம்.பல்வேறு ராணுவ உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்காக இந்தியா 1.3 லட்சம் கோடி ரூபாய் செலவழித்துள்ளது. இதில் 77 ஆயிரம் கோடி ரூபாய், பொதுத்துறை நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. 3,500 குறு, சிறு தொழில்நிறுவனங்கள் 14,000 கோடி ரூபாய் மட்டும் பெற்றுள்ளன. சுயசார்பு இலக்கை அடையும் வகையில் பாதுகாப்புத்துறையில் 74 சதவிகிதம் அளவுக்கு அந்நிய முதலீடை மத்திய அரசு அதிகரித்துள்ளது.

தனியார் நிறுவனங்களுக்கு கைகொடுக்கும் வகையில் மட்டும்தான் இது இருக்கும். ஆரம்ப கட்ட உறுதியற்ற தன்மைகளில் இருந்து இது இன்னும் வெளியே வரவில்லை. உலகின் முதல் நூறு ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்கள் பட்டியலில் இந்துஸ்தான் ஏரோநேட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் 35வது இடம் பெற்றுள்ளது. இந்திய பாதுகாப்புத்துறை தொடர்ந்து செழித்தோங்க, மேலும் உள்ளூர் ஆராய்ச்சி மட்டத்தில் எதிரிகளால் அழிக்கமுடியாத ஆயுதங்களை வடிவமைக்கவும், அவ்வப்போதைய காலகட்டத்துக்கு ஏற்ற அதிநவீன தொழில்நுட்பங்களை பெறவும் மத்திய அரசு அனைத்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

இந்தியாவில் தயாரிப்போம் என்ற திட்டத்தில் தாராளமயம், அந்நிய நேரடி முதலீட்டு உதவியில் கவனம் செலுத்துல், உள்ளூர் உற்பத்தி தொழிற்சாலைகளின் வலிமை மற்றும் திறனை முன்னெடுத்தல் ஆகியவற்றை கடைபிடித்தால் மட்டுமே பாதுகாப்புத்துறையில் தற்சார்பு நிலையை அடைய முடியும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.