இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அவரது மனைவி மெலனியா, மகள் இவாங்கா, மருமகன் ஜாரட் குஷ்னர் ஆகியோர் குடும்பத்துடன் இந்தியா வந்துள்ளனர்.
நேற்று காலை 11.30 மணிக்கு, குஜராத் மாநிலம் அகமதாபாத் வந்திறங்கிய அவர், அவரது மனைவி மெலனியா; பிரதமர் நரேந்திர மோடியுடன் சேர்ந்து மகாத்மா காந்திக்குப் பிடித்தமான 'சபர்மதி ஆசிரமத்தை' சுற்றிப் பார்த்தார்.
இந்நிலையில், இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி, 'அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சபர்மதி ஆசிரமத்தை சுற்றிப்பார்க்கும் காணொலி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்தத் காணொலியில் ட்ரம்ப் ராட்டையின் அருகே அமர்ந்திருப்பது போல காட்சி அமைந்திருந்தது.
அப்போது, ட்ரம்பின் மனைவி ராட்டையைச் சுழற்றிக் கொண்டிருக்க, அவரோ அருகில் எதுவும் பேசாது புகைப்படத்துக்கு போஸ் கொடுக்கிறார். அவருக்கு அங்கு சென்றது பிடிக்கவில்லை போல. பார்வையாளர் பதிவேட்டில் அவர் எழுதியிருந்த வாசகத்தை படித்தோமேயானால், சபர்மதி ஆசிரமத்துக்கு வந்தது பயனில்லை என ட்ரம்ப் கருதினார் என்பது தெளிவாகிறது' எனக் கூறினார்.
இதையும் படிங்க : 'ஷாஜகான் - மும்தாஜ் காதல் கதையைக் கேட்டு ட்ரம்ப் புல்லரித்துப்போனார்'