கடந்த மாதம், குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இந்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்திவருகின்றனர்.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் பிதர் பகுதியுள்ள பள்ளி மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா கொண்டாட்டத்தின்போது குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் குறித்து நாடகம் அரகேற்றப்பட்டது.
அந்த நாடகத்தில், ஒரு மாணவர் நரேந்திர மோடி நமது பெற்றோர்களின் பிறப்புச் சான்றிதழைக் கேட்டால் என்ன செய்வது என்று கேட்கிறார். அதற்கு மற்றொரு மாணவர் கோபத்துடன், அப்படி கேட்டால் நாம் மோடியின் பெற்றோர்களின் பிறப்புச் சான்றிதழை கேட்கலாம் என்கிறார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அதைத்தொடர்ந்து பள்ளி நிர்வாகிகள் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கர்நாடக அமைச்சர் பிரபு சவுகான் கூறுகையில், "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மோடியை அந்த நாடகம் அவமானப்படுத்தியுள்ளது. இதன் மூலம் நாட்டையே அவமானப்படுத்தியுள்ளனர்" என்றார்.
இதையும் படிங்க: டெல்லிவாசிகளை பாஜக அவமானப்படுத்துகிறது- கெஜ்ரிவால்