ETV Bharat / bharat

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு! - புதுச்சேரி சட்டப்பேரவை

புதுச்சேரி: இலங்கை தொடர் குண்டு வெடிப்பின் காரணமாக புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

புதுவை சட்டப்பேரவை
author img

By

Published : May 1, 2019, 12:55 PM IST

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தையடுத்து தீவிரவாதிகள் இந்தியாவுக்குள்ளும் ஊடுருவலாம் என்பதால் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் பாதுகாப்பு பணிகளை மேம்படுத்துவது தொடர்பாக சட்டப்பேரவைச் செயலாளர் வின்சென்ட் ராயர் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு!

அதன்பின், சட்டப்பேரவை வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள எட்டு கேமராக்கள் பல ஆண்டுகளுக்கு முன் பொருத்தப்பட்டதால் தற்போது பழுதடைந்துவிட்டன. எனவே அவற்றை அகற்றிவிட்டு புதிய நவீன ரக கேமராக்கள் பொருத்துவதற்கான நிதியை சபாநாயகர் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

இந்நிலையில், வேண்டுகோளுக்கினங்க புதுச்சேரி சட்டப்பேரவையில் புதிய நவீன ரக கேமராக்கள் பொருத்தப்படும் என துணை சபாநாயகர் சிவக்கொழுந்து தெரிவித்துள்ளார். இதையடுத்து, அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

Intro:புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த விரைவில் நவீன கேமராக்கள் பொருத்த சட்டசபை செயலாகும் திட்டமிட்டு உள்ளது

Body:புதுச்சேரி 1

இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 253 பேர் பலியாகினர் இதையடுத்து தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவலாம் என்பதால் நாடு முழுவதும் முக்கிய அரசு அலுவலகங்களில் கோயில்களில், திருத்தலங்களில் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி புதுச்சேரியில் முக்கிய இடங்களில் தேவாலயங்களில் பாதுகாப்பு பணிகளை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர் இந்த நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவை செயலகத்தில் பாதுகாப்பு பணிகளை மேம்படுத்த தொடர்பாக சட்டசபை செயலர் வின்சென்ட் ராயர் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர் அப்போது பல ஆண்டுகளுக்கு முன் சட்டசபை வளாகத்தில் பொருத்தப்பட்ட எட்டு கேமராக்களும் பழுதடைந்த நிலையில் இருந்தது அதற்கான கட்டுப்பாட்டு அறையில் டிவிகள், ரெக்கார்டிங் பதிவுகள் உள்ளிட்ட வசதிகள் இல்லை என்பது ஆய்வின்போது கண்டறியப்பட்டது தற்போதைய சூழ்நிலையில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் வந்து செல்லும் சட்டசபையில் உரிய கண்காணிப்பு இல்லாதது குறித்தும் உடனடியாக நவீன கட்டுப்பாட்டு அறை கேமராக்கள் அதற்கான ஊழியர்கள் நியமிப்பது என முடிவெடுக்கப்பட்டது

மேலும் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ள செயல்படாத கேமராக்களை அகற்றிவிட்டு 32 இடங்களில் புதிதாக மரங்களை நிறுவ பரிந்துரை செய்யப்பட்டுள்ளது இதற்கான நிதி மற்றும் அனுமதியை சபாநாயகர் தான் வழங்க வேண்டும் எனவே ஆய்வு தொடர்பான அறிக்கையை சட்டசபை துணை சபாநாயகர் சிவக்கொழுந்து அனுப்பி சட்டசபை செயலகம் மூலம் நிதி ஒப்புதல் பெற்று புதிதாக சிசிடிவி கேமராக்களை பொருத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது இதன்மூலம் சட்டசபைக்குள் யார்-யார் வந்து செல்கிறார்கள் புதிய நபர்களின் நடமாட்டம் உள்ளிட்டவை கண்காணித்து அசம்பாவிதங்களை தடுக்க சட்டசபை செயலகம் முடிவெடுத்துள்ளது

Conclusion:புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த விரைவில் நவீன கேமராக்கள் பொருத்த சட்டசபை செயலாகும் திட்டமிட்டு உள்ளது
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.