டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடக்கிறது. நாடே உற்றுநோக்கும் இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.
ஆம் ஆத்மி கட்சி சார்பில் மாநிலத்தின் முதலமைச்சரும், கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுகிறார். மற்ற இரு கட்சிகளும் முதலமைச்சர் வேட்பாளரை முன்னிறுத்தாமல் தேர்தலை எதிர்கொள்கின்றன.
தேர்தல் பரப்புரைகள் நேற்று மாலை 5 மணியோடு நிறைவுபெற்றது. இன்னும் 72 மணி நேரத்தில் வாக்குப்பதிவு நடக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் காவலர்கள் மற்றும் துணை ராணுவப் படைகள் ஈடுபட்டுவருகின்றனர்.
இதற்கிடையில் காஸியாபாத் - டெல்லி எல்லை பகுதிகளில் காவல் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள 36 சோதனை சாவடிகளில் காவலர்கள் தீவிரமாக கண்காணிப்பு, தணிக்கை பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். டெல்லி சட்டப்பேரவை முடிவுகள் வருகிற 11ஆம் தேதி மதியத்துக்குள் அறிவிக்கப்படவுள்ளன.
இதையும் படிங்க: ஹனுமன் சாலிசா பாடல் விவகாரம்: யோகிக்கு கெஜ்ரிவால் பதிலடி