ETV Bharat / bharat

அமைச்சர் கந்தசாமி போராட்டத்திற்கு ஆதரவாக மதச்சார்பற்ற கூட்டணி உண்ணாவிரதம்! - secular alliance fasting

புதுச்சேரி: அமைச்சர் கந்தசாமி சட்டப்பேரவையில் நடத்திவரும் உள்ளிருப்பு போராட்டத்திற்கு ஆதரவாக மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் இன்று (ஜன.17) உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது.

புதுச்சேரி
புதுச்சேரி
author img

By

Published : Jan 17, 2021, 3:12 PM IST

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் மக்கள் நலத்திட்ட கோப்புகள் தொடர்பாக, துணைநிலை ஆளுநரின் அழைப்பிற்காக சட்டப்பேரவையில் கடந்த எட்டு நாட்களாக உள்ளிருப்பு அறவழி போராட்டத்தில் அமைச்சர் கந்தசாமி ஈடுபட்டு வருகின்றார்.

அமைச்சர் கந்தசாமி போராட்டத்தை ஆதரித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மற்றும் பல்வேறு அமைப்பினரின் உண்ணாவிரதப் போராட்டம் பழைய சட்டக்கல்லூரி அருகே இன்று நடைபெற்று வருகிறது.

அமைச்சர் கந்தசாமி போராட்டத்திற்கு ஆதரவாக மதச்சார்பற்ற கூட்டணி உண்ணாவிரதம்

இப்போராட்டத்தில் முதலமைச்சர் நாராயணசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம், காங்கிரஸ் கட்சி தலைவர் ஏவி.சுப்பரமணியம், சட்டப்பேரவை உறுப்பினர் விஜயவேணி மற்றும் மதச்சார்பற்ற கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்று துணை நிலை ஆளுநருக்கு எதிராக கண்டன உரையாற்றினார்கள். போராட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:பாஜக நியமன எம்எல்ஏ மறைவு: முதலமைச்சர் நேரில் அஞ்சலி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.