ETV Bharat / bharat

இந்தியாவில் பரவும் புதிய நோய் 'ஸ்க்ரப் டைபஸ்' - விரிவான தகவல்கள்!

பாக்டீரியா காரணமாக புதிதாக பரவத் தொடங்கியுள்ள ’ஸ்க்ரப் டைபஸ்’ நோயின் அறிகுறிகள் குறித்தும், அதனைத் தடுக்கும் முறைகள் குறித்தும் இக்கட்டுரையில் விரிவாகக் காண்போம்.

t
st
author img

By

Published : Sep 23, 2020, 11:35 PM IST

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. வைரஸ் தடுப்புப் பணியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாகக் களமிறங்கியுள்ளன. இந்நிலையில், நாகலாந்தில் அடுத்ததாக ’ஸ்க்ரப் டைபஸ்’ எனும் புதிய நோய் ஒன்று வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. பாக்டீரியா மூலம் பரவும் இந்த நோய் காரணமாக இதுவரை 618 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, ஓரியண்டியா சுட்சுகமுஷி என்ற பாக்டீரியாவால் ஸ்க்ரப் டைபஸ் நோய் ஏற்படுகிறது என்றும், ஸ்க்ரப் டைபஸ் பாதிப்பு உள்ள லார்வா பூச்சிகள் கடித்ததன் மூலம் தான் மக்களுக்கு இந்நோய் பரவியுள்ளது‌ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசியா, இந்தோனேசியா, சீனா, ஜப்பான், இந்தியா மற்றும் வடக்கு ஆஸ்திரேலியாவின் கிராமப்புறங்களில் ஸ்க்ரப் டைபஸின் தாக்கம் உள்ளது.

ஸ்க்ரப் டைபஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 நாள்களுக்குள் கீழே குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் தென்படலாம்.

காய்ச்சல்

தலைவலி

உடல் வலி மற்றும் தசை வலி

சரும பாதிப்பு

மனக் குழப்பம்

நோயின் வீரியம் கடுமையாக இருந்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உறுப்பு செயலிழப்பு, இரத்தப்போக்கு ஆகியவையும் ஏற்படக்கூடும். இதற்கு சரியான நேரத்திற்கு சிகிச்சையளிக்காவிட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படும். நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதைக் கண்டறிவது கடினம். எனவே, இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை உடனடியாக அணுகுவது நல்லது.

சிகிச்சை முறைகள்:

ஸ்க்ரப் டைபஸை ஆண்டிபயாடிக் டாக்ஸிசைக்ளின் மூலம் குணப்படுத்தலாம். இதனை அறிகுறிகள் தென்பட்டவுடன் அளித்தால் மிகவும் உபயோகமாக இருக்கும். விரைவாக ஸ்க்ரப் டைபஸை குணப்படுத்திட முடியும்.

தடுக்கும் முறைகள்:

இந்த நோய் பாதிப்பதற்கு முன்பாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது சிறந்தது. இந்த நோய் பாதிப்பு உள்ள பகுதிகளுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும். அப்படியே சென்றாலும், அடர்த்தியான தாவரங்கள் இருக்கும் பகுதியில் பூச்சிகள் கடிக்கும் ஆபத்து உள்ளதால், அங்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

பூச்சிகள் கடிப்பதைத் தடுக்கும் தோல் கீரிம்களை பயன்படுத்துங்கள். மேலும், பெர்மெத்ரின் தயாரிப்புகளை பயன்படுத்துவதின் மூலம் லார்வா பூச்சிகளை இறந்துவிடும். ஆனால், அந்தத் தயாரிப்புகளை நேரடியாக தோலில் பயன்படுத்த வேண்டாம்.

இந்தியாவின் சில பகுதிகளில் ஸ்க்ரப் டைபஸ் நோயின் தாக்கம் உள்ளதால் மக்கள் அங்கெல்லாம் செல்லும்போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தடுப்பூசி இன்னும் வணிக ரீதியாகக் கிடைக்கவில்லை என்பதால், சரியான தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி, அறிகுறிகள் தோன்றும்போது மருத்துவ உதவியைப் பெறுவது அவசியமாகும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.