பிரதமர் நரேந்திர மோடியுடன் மத்தியப் பிரதேச காங்கிரஸ் முக்கிய தலைவர் ஜோதிராதித்திய சிந்தியா சந்திக்க இருக்கிறார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் அரசியல் குழப்பம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. காங்கிரஸ் ஆட்சி செய்துவரும் அம்மாநிலத்தில், முதலமைச்சர் கமல்நாத்துக்கு எதிராக அமைச்சர்கள் நேற்றிரவு கூண்டோடு ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில், அம்மாநில காங்கிரஸ் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஜோதிராதித்திய சிந்தியா, பிரதமர் மோடி இல்லத்துக்கு தற்போது விரைந்துள்ளார்.
இதற்கிடையே உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் மோடி இல்லத்துக்கு விரைந்துள்ளார்.
தனது ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் பாஜகவில் சிந்தியா இணையும் பட்சத்தில் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் அரசு கவிழ வாய்ப்புள்ளது.