சீனாவின் வூகான் பகுதியில் முதன் முதலாக அறியப்பட்ட கரோனா வைரஸ் என்னும் கோவிட்-19 தொற்று நோய், மின்னல் வேகத்தில் உலக நாடுகளைத் தாக்கியது. இந்த வைரஸூக்கு சீனாவை காட்டிலும் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் அதிக விலை கொடுத்துள்ளன.
ஈரானும் நிலை குலைந்துள்ளது. அண்டை நாடான இந்தியா ஒரு நாள் மக்கள் ஊரடங்கை 21 நாள்களுக்கு நீட்டித்து வீட்டில் முடங்கிக் கிடக்கிறது. இந்நிலையில் சீனாவில் மெல்ல மெல்ல இயல்புநிலை திரும்பிவருகிறது. அங்கு அமலில் இருந்த ஒன்பது வார முடக்கம் முடிவுக்கு வந்துவிட்டது.
இது குறித்து ஹாங்ஹாங் பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயியல் நிபுணர் பென் கோவ்லிங் கூறும்போது, “இது பூட்டுதலை தளர்த்த வேண்டிய சரியான நேரம். எனினும் தொற்றுநோய்களின் இரண்டாவது அலை குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சீனாவைப் பொறுத்தவரை வூகான் மாகாணம் முழுமையான பூட்டுதலுக்கு ஆளானது. இப்பகுதியைச் சேர்ந்தவர்களின் பயணம் தடைசெய்யப்பட்டது. பெரும்பாலான வணிகங்கள், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டன.
இந்த கொடிய வைரஸை எதிர்கொள்ளும் விதமாக மக்கள் வீடுகளில் அவசியம் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டனர். இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டது. சீனா அதன் எல்லைகளை மூடி சீல் வைத்தது. சமூக இடைவெளி கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
இதுமட்டுமின்றி விரிவான சோதனை மற்றும் பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்துதல் ஆகியவைப் பரவலைக் கட்டுப்படுத்த வழிவகுத்தன. ஆனால் இத்தாலி மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகள் இயல்பான வாழ்க்கைக்கு திரும்புவதற்கு அதிக சவால்களை எதிர்கொள்ளக்கூடும்.
ஏனெனில் சமூக விலகல் இல்லாமல் வைரஸை குறைப்பது கடினம். மக்களுக்கு மீண்டும் வைரஸ் தொற்றுகள் ஏற்படக்கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளன. வெறுமனே பூட்டுதலால் மட்டும் வைரஸை எதிர்கொள்ள முடியாது.
வைரஸை அடக்க கடுமையான முயற்சிகள் தேவை. இந்த முயற்சிகள் மீண்டும் தேவைப்படலாம் அல்லது தொடர வேண்டும். ஏனெனில் வைரஸ் பரவல் என்பது சாதாரணம் அல்ல. சீனாவின் ஹூபே மாகாணம் வைரஸ் பாதிப்பிலிருந்து மீளவில்லை. மக்கள் இயல்புநிலைக்கு திரும்பவில்லை.
மக்கள் வீட்டை விட்டு பயந்து பயந்து வெளியே வருகின்றனர். அவர்களிடம் உடல்நலம், பொருளாதாரம் மற்றும் நல்வாழ்வு ஆகியவற்றின் மீதான பதற்றம் காணப்படுகிறது. இதனால் அவர்கள் தங்களின் எதிர்காலம் குறித்து கவலை கொள்கின்றனர்.
ஆகவே ஹூபே மாகாணத்தில் வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு வரவில்லை. ஆனாலும் சில இடங்களில் மக்கள் மெதுவாக வீடுகளை விட்டு வெளியேறி வேலைக்குத் திரும்புகின்றனர். தொழிற்சாலைகள் மீண்டும் திறக்கப்படுகின்றன.
எனினும் பல்கலைக்கழகங்கள், பள்ளிகள் மற்றும் குழந்தை பராமரிப்பு மையங்கள் மூடப்பட்டே உள்ளன. மாகாண தலைநகரான வூகானுக்கு உள்ளேயும் வெளியேயும் மக்கள் பயணம் மேற்கொள்ள ஏப்ரல் 8ஆம் தேதி வரை தடைசெய்யப்பட்டுள்ளது.
கரோனா வைரஸால் மார்ச் மாதம் 18ஆம் தேதி முதல், ஹூபே கடுமையான சரிவை சந்தித்தது. ஹூபே தவிர மற்ற மாகாணங்களில் வைரஸ் பாதிப்புகள் பெருமளவு காணப்படவில்லை. வூகானில் 81 ஆயிரம் மக்கள் கரோனாவினால் பாதிக்கப்பட்டனர்.
தற்போது அந்த மக்கள் நோயிலிருந்து விடுபட்டுள்ளனர். இது அநேகமாக 10 விழுக்காட்டுக்கும் குறைவாகவே உள்ளது, அதாவது தொற்றுநோயால் பாதிக்கப்படக்கூடியவர்கள் இன்னும் நிறைய பேர் உள்ளனர். ஆதலால் கரோனாவிற்கு எதிராக எங்களின் போராட்டம் தொடர்கிறது.
விஞ்ஞானிகள் தொடர்ந்து இதனை கவனித்துவருகிறோம். கரோனா நோயாளிகளை கண்டறியும் வகையில் க்யூ ஆர் கோடு ஒன்று வழங்கப்படுகிறது. இதில் ஒருவர் கரோனா நோயாளியாக இருந்தாலோ அல்லது பாதிக்கப்பட்டவர்களுடன் பழகியிருந்தாலோ அல்லது பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்றிருந்தாலோ அவர்களின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு அவர்கள் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். அவர்களுக்கு பச்சை நிறம் வழங்கப்படும். இதனால் கரோனா பாதிக்கப்பட்ட நபர் மற்றவர்களுடன் கலப்பதைத் தடுக்கலாம். இது மட்டுமல்லாமல் ஒரு புதிய கரோனா நபர் கண்டறியப்பட்டால், அந்த நபரின் நகர்வுகளை அரசாங்கத்தால் கண்காணிக்க முடியும்.
அவர்கள் தொடர்பு கொள்ளக்கூடிய நபர்களைக் குறித்தும் விசாரிக்க முடியும். இத்தாலி, ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் இதனை தற்போது பயன்படுத்திவருகின்றன. கரோனா விவகாரத்தில் சீனா கடுமையான நடவடிக்கை எடுத்தது. மக்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
முன்னதாக சோதனை நடத்தப்பட்டது. அரசு மருத்துவமனை கட்டியது. புதிய கொள்கைகளை ஒழுங்குப்படுத்தி தொடர்ச்சியான நடவடிக்கைகளை செயல்படுத்தியது. மக்களின் வெப்ப நிலையை சரிபார்க்க சுகாதாரப் பணியாளர்கள் வீடு வீடாக சென்றனர்.
இருமல், காய்ச்சல் என அறிகுறி கொண்ட அனைவரும் சோதிக்கப்பட்டனர். இதுவே சீனாவில் வைரஸைக் கட்டுப்படுத்த உதவியது” என்றார்.
இதையும் படிங்க:ஏழைகளின் பசி அறியாமல் அறிவிக்கப்பட்ட 21 நாள் அடைப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேதனை!