உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில் அதற்காக போராடும் மருத்துவர், செவிலியர், முன்கள பணியாளர்களுக்கு பலர் தங்களது நன்றிகளை தெரிவித்து வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக, புதுச்சேரி செட்டித் தெருவைச் சேர்ந்த ராஜசேகர், பத்மபிரியா தம்பதியின் மகள் ஸ்ரீசாயா (15). இவர் கரோனாவை எதிர்த்து போராடும் மருத்துவர், செவிலியர், முன்கள பணியாளர்களுக்கு ஆதரவை தெரிவிக்கும் வகையில் கண்ணைக் கட்டிக்கொண்டு இடைவிடாமல் ஒரு மணி நேரம் வீணை வாசித்தார்.
இவர் கண்ணை கட்டிக்கொண்டு எடுத்துத் தரும் ராகத்தை ஞானதிருஸ்டி மூலம் படித்துவிட்டு வாசிக்கின்றனர். மேலும் எழுதிக்கொடுக்கும் வார்த்தைகள், என்ன வகை நோட், அதன் மதிப்பு உள்ளிட்டவைகளை கண்ணை கட்டிக்கொண்டு ஞானதிருஸ்டி மூலம் சரியாக கூறுகின்றார்.
இதையும் படிங்க:இரண்டரை மணிநேரம்... இடைவிடாமல் வீணை வாசித்து அசத்திய மங்கைகள்!