சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் (கோவிட் 19) தொற்று, தற்போது இந்தியாவில் வேகமாக பரவிவருகிறது. இந்தியாவில் ஏற்கனவே 31 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதை அரசு உறுதி செய்துள்ளது.
இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33ஆக உயர்ந்துள்ளது. ஜம்முவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இருவரையும் மருத்துவமனையில் தனி அறையில் வைத்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.
மேலும் கொரோனா வைரஸ் நோய் பரவாமல் இருக்க ஜம்மு காஷ்மீர் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில், ஜம்மு, சம்பா ஆகிய இரு மாவட்டங்களில் உள்ள ஆரம்பப் பள்ளிகளுக்கு வரும் 31ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதே போல் அம்மாநில முழுவதும் வரும் 31ஆம் தேதி வரை பயோமெட்ரிக் வருகை பதிவும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும்- மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்