ETV Bharat / bharat

சவடு மணல் வழக்கு: உச்ச நீதிமன்றம் ஒத்திவைப்பு!

டெல்லி : தமிழ்நாட்டின் 13 மாவட்டங்களில் சவுடு மண் எடுக்க உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை விதித்திருந்த இடைக்கால தடையை எதிர்த்து தமிழ்நாடு அரசு தொடர்ந்த மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

SC urges respondents in TN sand mining case to file petitions on next Thursday
மணல் குவாரிகள் குறித்த உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அரசு தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு!
author img

By

Published : Feb 20, 2020, 9:00 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் இலந்தைகுட்டத்தை சேர்ந்தவர் நாகேந்திரன். இவர் ராமநாதபுரம் மாவட்டம் ஜமீன்தார் வலசை, தமிழர்வாடி சமத்துவபுரம், சித்தார்கோட்டை, குலசேகரன்கால் உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் இருந்து சட்டவிரோதமாக சவுடு மணல் எடுத்து விற்பனை செய்யப்படுவதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அண்மையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், ’கடற்கரை கிராமங்களில் மணல் அள்ளுவது கனிம வள விதிகளுக்கு எதிரானது. அனுமதி பெற்ற அளவை காட்டிலும் 15 அடி வரை கூடுதலாக ஆழம் தோண்டி மணல் எடுக்கின்றனர். இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு கடல்நீர் ஊருக்குள் புகுந்துவிடும் நிலை உள்ளது. இதுதொடர்பாக நடவடிக்கை கோரி அதிகாரிகளிடம் தொடர்ந்து பலமுறை மனு அளித்தும் பலன் இல்லை. எனவே ராமநாதபுரம் மாவட்டம் இலந்தைகுட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மணல் அள்ள தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

SC urges respondents in TN sand mining case to file petitions on next Thursday
மணல் குவாரிகள் குறித்த உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அரசு தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு!

இந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘சவுடு மண், மணல் எடுப்பது தொடர்பாக பல்வேறு வழிகாட்டுதல்களை நீதிமன்றங்கள் வழங்கியுள்ளன. ஆனாலும் அவை முறையாக பின்பற்றப்படுவதில்லை. ஏற்கனவே, சவுடு மண் எடுக்க அனுமதி வழங்கி இருந்தால், அந்த உத்தரவுகள் உடனடியாக நீக்கம் செய்யப்படுகிறது. குறிப்பாக, மதுரைக்கிளை நீதிமன்றத்திற்குட்பட்ட மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட13 மாவட்டங்களிலும் சவுடு மண் அள்ள இடைக்கால தடை விதிக்கப்படுகிறது’ என்று உத்தரவிட்டிருந்தனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக்கிளையின் இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி யு.யு.லலித், எதிர் மனுதாரர்கள் பதிலளிக்க வரும் வியாழக்கிழமை தான் கடைசி நாள் அதற்குமேல் கால அவகாசம் வழங்க முடியாது என்று வழக்கை வரும் 27ஆம் தேதி வரையில் ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க : கட்சியை மீட்டெடுக்க சசி தரூர் சொன்ன ஐடியா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.