ETV Bharat / bharat

பத்மநாபசுவாமி கோயிலை நிர்வகிக்க அரச குடும்பத்துக்கு உரிமை உண்டு: உச்ச நீதிமன்றம் - திருவாங்கூர் அரச குடும்பம் பத்மநாபசுவாமி கோயில்

டெல்லி: பிரசித்திப் பெற்ற திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் நிர்வாக உரிமை திருவிதாங்கூர் அரச குடும்பத்திற்கு உண்டு என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Kerala
Kerala
author img

By

Published : Jul 13, 2020, 11:38 AM IST

Updated : Jul 13, 2020, 1:07 PM IST

கேரள மாநிலம் திருவனந்தபுரம் உள்ள பத்மநாப சுவாமி கோயில் நிர்வாகம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று (ஜூலை 13ஆம் தேதி) வழங்கியது.

அந்தத் தீர்ப்பில், “கோயில் நிர்வாக உரிமை பாரம்பரிய முறைப்படி திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் அரச குடும்பத்தை சேரும். என்னும் திருவனந்தபுரம் மாவட்ட நீதிபதி தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் மேற்பார்வையிடுவார்கள்” என கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, கேரள அரசு சார்பில் அறக்கட்டளை அமைத்து ஆலய நிர்வாகத்தை மேற்கொள்ள வேண்டும் என கடந்த 2011ஆம் ஆண்டு கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதைத் தொடர்ந்து வழக்கின் தீர்ப்புக்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்ட நிலையில், ஒன்பது ஆண்டுகளுக்குப்பின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

18ஆம் நூற்றாண்டில் இந்தக் கோயிலை மறுபுனரப்பை செய்த திருவாங்கூர் அரச குடும்பம், சுதந்திரத்திற்குப்பின்னரும் கோயில் நிர்வாக நடவடிக்கையை தொடர்ச்சியாக செய்துவந்தது.

இந்நிலையில், கோயில் நிதியை கையாளுவதில் முறைகேடு நடப்பதாகக் கூறி இந்தக் வழக்கு நீதிமன்றத்தில் தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கேரள தங்கக் கடத்தல்: ஃபாசில் ஃபரீத்திடமிருந்து பெற்ற வாக்குமூலம்!

Last Updated : Jul 13, 2020, 1:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.