ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி உயர் நீதிமன்றத்தில் பணியாற்றிய இரண்டு சட்ட அலுவலர்கள் (அருண் குமார் குப்தா, ராஜ் நந்தன் ராய்) மீது பெண்கள் பாலியல் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சட்ட அலுவலர்கள் இருவருக்கும் கட்டாய ஓய்வு அளித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர்கள் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், தீபக் குப்தா ஆகியோர் நேற்று தள்ளுபடி செய்தனர்.
மேலும் நீதிபதிகள் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதிப்படுத்தினர். ஆக இனிவரும் காலங்களில் சட்ட அலுவலர்கள் மீது 10க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் புகார் அளிக்கும்பட்சத்தில் அவருக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்படும்.
நீதிபதிகள் தங்களின் தீர்ப்பில் சட்ட அலுவலர்கள் குப்தா, ராய் ஆகியோர் மீது இரண்டு விதமான குற்றச்சாட்டுகள் இருப்பதாக தெரிவித்தனர். முதலாவது குப்தா, ராஞ்சியில் உள்ள நிர்வாக பயிற்சி நிறுவனத்தின் துணை இயக்குநராக இருந்த காலப்பகுதியை பற்றியது.
அப்போது அவர் பெண்கள் மத்தியில் ஆட்சேபனைக்குரிய வகையில் பாலியல் மொழியை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இரண்டாவது வழக்கில், குப்தா தனது துணிகளை ஒழுங்காக சலவை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டில் தலையில் ஒரு சூடான இரும்பை வைத்து ஒரு பணியாளரை உடல் ரீதியாக காயப்படுத்தியிருந்தார்.
ராய் வழக்கில் உச்ச நீதிமன்றம் பல விஷயங்களில் அவரது பதிவு நன்றாக இல்லை என்று குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சுஜாதாவிடமிருந்து கற்றதும், பெற்றதும், ரசித்ததும்...