பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தபோது 2017ஆம் ஆண்டு நிதிச் சட்டத்தை கொண்டுவந்தது. இந்தச் சட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
இந்தச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் சந்திரசூட், தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தால் பண மசோதாவாக நிறைவேற்றப்பட்டது. தீர்ப்பாய உறுப்பினர்களின் பதவிக்காலம், நிபந்தனைகளை தீர்மானிக்கும் அதிகாரங்களை அரசு கையகப்படுத்துகிறது என்பதே இச்சட்டம் மீதான குற்றச்சாட்டு.
இந்த வழக்கில் மனுதாரருக்கு ஆதரவாக வழக்குரைஞர் அரவிந்த் பி. தாதர் வாதாடினார். மத்திய அரசு சார்பில், தலைமை வழக்குரைஞர் வேணுகோபால் ஆஜராகி வாதத்தை முன்வைத்தார்.
இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், இன்றைய தினம் தீர்ப்பு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரபேல் வழக்கு மறுசீராய்வு மனுக்கள் மீது நாளை தீர்ப்பு