இந்தியாவின் பெயரை 'பாரத்' என மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் டெல்லியைச் சேர்ந்த ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த வந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ். ஏ. பாப்டே நேற்று விடுப்பில் இருந்த காரணத்தால் தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெறவுள்ளது.
பெயர், ஒன்றியத்தின் எல்லைகள் ஆகியவை அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 1இல் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து நாட்டின் பெயரை பாரத் அல்லது இந்துஸ்தான் என மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பழைய காலனித்துவ வரலாற்றிலிருந்து மக்கள் விடுபெற இந்த சட்டத் திருத்தம் உதவும், ஆங்கில பெயரை அகற்றுவது அடையாளமாக பார்க்கப்படும், குறிப்பாக எதிர்கால சந்ததியினர் தேசியவாதத்தில் பெருமை கொள்ள இந்த பெயர் மாற்றம் உதவும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெயர் மாற்றம் செய்யப்படுவது விடுதலைக்காக போராடியர்களுக்கு நியாயம் செய்யும் வகையில் அமையும் என மனுவில் கோரப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: பறிபோன இரு உயிர்கள் - கர்ப்பிணி யானைக்கு அன்னாசிப் பழத்தில் வெடியை வைத்து வழங்கிய மிருகங்கள்