சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் நீதிமன்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த பாஜக, பல்வேறு இந்துத்துவ அமைப்புகள், ஐயப்ப பக்தர்கள் ஆகியோர் சபரிமலை கோயிலுக்குள் செல்ல முயற்சிக்கும் பெண்களை நுழையாதவாறு தடுத்து போராட்டங்களில் ஈடுபட்டுவருந்தனர்.
இதனிடையே உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறுசீராய்வு செய்யக்கோரி அகில இந்திய சேவா சங்கம், நாயர் சேவா சங்கம் உள்ளிட்ட பல இந்துத்துவ அமைப்புகள் மனுக்களை தாக்கல் செய்திருந்தன.
இந்த மனுக்கள் மீதான விசாரணை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன்பு இன்று வருகிறது.