ETV Bharat / bharat

உச்ச நீதிமன்றத்தில் ஏ4 காகிதம் மட்டுமே அனுமதி

author img

By

Published : Mar 13, 2020, 9:07 AM IST

Updated : Mar 13, 2020, 9:57 AM IST

டெல்லி: ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல், உச்ச நீதிமன்றத்தில் ஏ4 காகிதத்தில் இரு பக்கமும் நிரப்பப்பட்ட மனுக்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

supreme court Chief Justice of India S A Bobde Apex court A4 size paper from April 1 news related to court apex court secretary general Sanjeev S Kalgaonkar உச்ச நீதிமன்றத்தில் ஏ4 காகிதம் மட்டுமே அனுமதி ஏ4 காகித புகார் மனுக்கள், ஏப்ரல் 1ஆம் தேதி, உச்ச நீதிமன்றம், எஸ்.ஏ. போப்டே
SC to accept petitions only on A4 size paper from April 1

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் ஒரே மாதிரியான காகிதங்களை பயன்படுத்துதல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் விதமாக இந்த நடைமுறை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இது குறித்து உச்ச நீதிமன்ற பொதுச்செயலாளர் எஸ். சஞ்சீவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

நிர்வாகத்தில் ஒரே அளவிலான காகிதங்களை பயன்படுத்துவது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஒரே மாதிரியான ஏ4 காகிதத்தில் மட்டுமே உச்ச நீதிமன்றத்தில் மனு அளிக்க வேண்டும்.

அந்த காகிதம் மிக தெளிவாக இருக்க வேண்டும். இந்த வகையான மனுக்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். இந்த வகை காகிதங்களை இரு பக்கமும் பயன்படுத்திக்கொள்ளலாம். வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் இது பற்றி தகவல்கள் வழக்குரைஞர்களுக்கு குறுந்தகவல் மூலம் தெரிவிக்கப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நீதிமன்றங்களில் புகார் மனுக்கள் ஏ4காகிதம் மட்டுமின்றி ஏ3 காகிதத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் உச்ச நீதிமன்றம் இதனை அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தவறு செய்திருந்தால் என்னை தூக்கிலிடுங்கள் - உன்னாவ் வழக்கு குற்றவாளி செங்கார் நீதிமன்றத்தில் தெரிவிப்பு!

Last Updated : Mar 13, 2020, 9:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.