இது குறித்து மத்திய கல்வி அமைச்சர் தாக்கல் செய்த மனு மீதான அவமதிப்பு நடவடிக்கைகள் குறித்த வழக்கை நீதிபதி ஆர்.எஃப். நாரிமன் தலைமையிலான அமர்வு நிறுத்தி வைத்துள்ளது.
உத்தரகாண்ட் உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு மே மாதம் 3ஆம் தேதி அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர்கள் பதவி விலகியதிலிருந்து, தொடர்ந்து அரசு தங்குமிடங்களை பயன்படுத்திய முழு காலத்திற்கும் உரிய வாடகை செலுத்த உத்தரவிட்டது.
மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர்களுக்கு வீட்டுவசதி, பிற வசதிகளை வழங்கும் அனைத்து அரசாங்க உத்தரவுகளையும் உயர் நீதிமன்றம் சட்டவிரோதமானது என்றும் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்றும் அறிவித்தது.
முன்னாள் முதலமைச்சர்களுக்கு மாநிலத்தால் வழங்கப்பட்ட மின்சாரம், நீர், பெட்ரோல், எண்ணெய், மசகு எண்ணெய் போன்ற வசதிகளுக்கு செலுத்த வேண்டிய அனைத்து தொகையும் நீதிமன்றத்தில் நகல் பெறப்பட்ட நாளிலிருந்து நான்கு மாதங்களுக்குள் மாநில அரசால் கணக்கிடப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தத் தொகை முன்னாள் முதலமைச்சர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்றும், அதனை மாநில அரசுக்கு செலுத்த வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டேராடூனைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் அளித்த மனு மீது உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்திருந்தது.
கடந்த ஆண்டு பிறப்பித்த இந்த உத்தரவுக்குப் பிறகு, தன்னார்வ தொண்டு நிறுவனம் இந்த உத்தரவை பின்பற்றவில்லை என்று உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.