ETV Bharat / bharat

புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அதிருப்தி - New parliament building in Delhi

புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் கட்டுமான பணிகளைத் தொடங்கக் கூடாது என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்
author img

By

Published : Dec 7, 2020, 6:23 PM IST

டெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு எதிரான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், புதிய கட்டடம் கட்டும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

டெல்லியில் அமையவுள்ள நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தின் கட்டுமான பணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வரும் 10ஆம் தேதி அடிக்கல் நாட்டவுள்ளார். முன்னதாக புதிய கட்டடம் கட்டும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டன. இதனை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கான்வில்கர், தினேஷ் மகேஸ்வரி, சஞ்சீவ் கன்னா அடங்கிய அமர்வு இன்று (டிசம்பர் 7) விசாரணை செய்தது.

அப்போது, வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் கட்டுமான பணிகளுக்கான நடவடிக்கையை மேற்கொண்டுவரும் மத்திய அரசின் செயல் அதிருப்தி அளிப்பதாக, நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து, மத்திய அரசு சார்பில் வாதிட்ட அரசு வழக்குரைஞர் துஷர் மேக்தா, நீதிபதிகளிடம் மன்னிப்புக் கோரி, கட்டுமான பணிகள் நடைபெறாது எனக் கூறினார். அதேபோல் புதிய கட்டடம் அமையவுள்ள பகுதியில் உள்ள மரங்கள் வெட்டப்படாது என உறுதியளித்தார்.

இதைத்தொடர்ந்து, திட்டமிட்டப்படி அடிக்கல் நாட்டு விழாவினை நடத்த அனுமதி வழங்கிய நீதிபதிகள், புதிய கட்டடம் தொடர்பான ஆவணப் பணிகளைத் தொடரலாம் எனத் தெரிவித்தனர்.

ரூ.971 கோடி ரூபாயில் கட்டப்படவுள்ள புதிய நாடாளுமன்ற கட்டடத்தை 2022ஆம் ஆண்டுக்குள் கட்டிமுடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதையும் படிங்க: புதிய நாடாளுமன்றத்தை கட்ட ஏலம் - வெறும் மூன்று கோடி ரூபாயில் தட்டிச் சென்ற டாடா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.