ETV Bharat / bharat

விடுமுறைக்கு பிறகு விசாரணைக்கு வரும் முக்கிய வழக்குகள்! - விடுமுறைக்கு பிறகு விசாரணைக்கு வரும் முக்கிய வழக்குகள்ள

டெல்லி: வேளாண் சட்டங்கள், மதமாற்ற தடை சட்டம், ராணுவத்தில் பெண் அலுலவர்களுக்கான நிரந்தர ஆணையம் உள்ளிட்ட உச்ச நீதிமன்ற வழக்குகளின் விசாரணை விடுமுறைக்கு பிறகு ஜனவரி 4ஆம் தேதி முதல் எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்
author img

By

Published : Dec 31, 2020, 4:26 PM IST

உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள முக்கிய வழக்குகளின் விசாரணை கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைக்கு பிறகு ஜனவரி 4ஆம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பல்வேறு அமர்வுகளுக்கு ஒதுக்கப்பட்ட வழக்குகளின் பட்டியலை நீதிமன்றம் இந்த வாரம் வெளியிட்டிருந்தது. புதிதாக நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிவரும் விவசாயிகள் தொடர்பான வழக்கும் நிலுவையில் உள்ளது.

வேளாண் சட்டம் தொடர்பான வழக்குகள்

நவம்பர் மாத இறுதியிலிருந்து, டெல்லியின் எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் தொடர் போராட்டத்தை மேற்கொண்டுவருகின்றனர். சட்டத்தை நீக்குவது தொடர்பான மனுக்களும் போராட்ட களத்திலிருந்து விவசாயிகளை அகற்றுவது தொடர்பான வழக்குகளும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. விவசாய சங்க பிரதிநிதிகளிடம் சுமூக பேச்சுவார்த்தை மேற்கொள்ள மத்தியஸ்தர் ஆணையத்தை அமைக்கும்படி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே அரசு தரப்பை கேட்டுக்கொண்டார்.

ராணுவத்தில் பெண்களுக்கான நிரந்தர ஆணையம் தொடர்பான மனு

இருந்தபோதிலும், அவசரம் ஏற்படும்பட்சத்தில் மனுதாரர்கள் விடுமுறை கால அமர்வை அணுகலாம் எனவும் பாப்டே தெரிவித்திருந்தார். அதேபோல், ராணுவத்தில் பெண் அலுலவர்களுக்கான நிரந்தர ஆணையம் அமைப்பது தொடர்பான வழக்கு டிசம்பர் 30ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கு, ஜனவரி 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு இதனை ஜனவரி 19ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளது.

உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் நிறைவேற்றப்பட்ட மதமாற்ற தடை சட்டம் அடிப்படை உரிமைகளுக்கு எதிராக உள்ளது என கூறி உச்ச நீதிமன்றத்தில் அதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஜனவரி 6ஆம் தேதி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வுக்கு முன்பு இது விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.