குடியரசுத் தலைவர் பார்வைக்கும் வரும் கருணை மனுக்களைக் குறிப்பிட்ட காலவரையறைக்குள் முடித்துவைக்கும் வழிமுறைகள், சட்டங்கள் வகுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி சிவ் குமார் திரிபாதி என்பவர் உச்ச நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே, நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கி அமர்வு முன்பு மே 27ஆம் தேதி காணொலி காட்சி மூலம் விசாரணைக்கு வந்தது.
அப்போது தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே, "குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படும் கருணை மனுக்களைக் குறிப்பிட்ட காலவரையறைக்குள் முடித்துவைப்பது முக்கியம். ஆனால், கருணை மனுக்களை விரைந்து முடிக்குமாறு குடியரசுத் தலைவருக்கு உத்தரவிட நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை.
ஆனால், மனுக்களை குறிப்பிட்ட காலவரையறைக்குள் முடித்துவைக்கும் வழிமுறைகளை உள் துறை அமைச்சகம் அளிக்க உத்தரவிட அதிகாரம் உள்ளது. இது குறித்து உள் துறை அமைச்சகம் பதிலளிக்க வேண்டும்" எனக் கூறி வழக்கை ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க : நான் இருக்கேன்; இந்தியா - சீனா மத்தியஸ்தத்திற்கு முன்வந்த ட்ரம்ப்