நாடு முழுவதும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், தனியார் மருத்துவமனையின் தேவையும் தற்போது அதிகரித்துள்ளது. பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் பெருமளவில் கட்டணம் வசூலிப்பதால் இதை ஒழுங்குமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இது தொடர்பாக அவிஷேக் கோயங்கா என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கை உச்ச நீதிமன்றமன்றம் விசாரித்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அசோக் பூஷண், ராமசுப்ரமணியம் கொண்ட அமர்வு இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு ஒரு வாரத்துகுள் பதிலளிக்க கோரி உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு,'அரசிடம் இருக்கும் இலவச நிலங்களை ஏன் தனியாருக்கு வழங்கி, தற்காலிக மருத்துவமனை அமைத்து இலவசமாகவோ அல்லது குறைந்த விலையிலோ மருத்துவம் அளிக்க வழி செய்யக் கூடாது' என மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனா வார்டுகளில் யோகா மற்றும் தியான வகுப்பு