குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகீன் பாக் பகுதியில் கடந்த 55 நாட்களுக்கும் மேலாகப் போராட்டம் நடந்து வருகிறது.
இவர்களை அப்புறப்படுத்தக்கோரி, டெல்லி உச்ச நீதிமன்றத்தில் இரண்டு பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.கே. கவுல், ஜே.எம். ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மத்திய அரசு மற்றும் டெல்லி அரசுக்கு இதுதொடர்பாக பதிலளிக்க உத்தரவிட்டனர்.
இதையடுத்து இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், 'போராட்டம் என்ற பெயரில் சாலைகளைத் தடுத்து, பொதுமக்களுக்கு இடைஞ்சல் கொடுக்கக்கூடாது' எனவும் அறிவுறுத்தினர். இது குறித்து நீதிபதிகள், 'இது (குடியுரிமை திருத்தச் சட்டம்) ஒரு சட்டம். இதற்கு எதிராக பொதுமக்கள் தங்களின் குறைகளைக் கூறலாம். மேலும் இவ்விவகாரம் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
எனினும், சிலர் போராடி வருகின்றனர். இதற்கு உங்களுக்கும் உரிமை உண்டு. ஆனாலும், சாலைகளைத் தடுத்து போராடக் கூடாது. இதுபோன்ற பகுதிகளில் காலவரையறையின்றி போராடவும் கூடாது. அதற்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் போராட்டம் நடத்த வேண்டும்.
இந்த வழக்கு வருகிற 17ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. அதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது' என்று கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க : ஷாகீன் பாக் போராட்டத்துக்கு எதிராக பொதுநல வழக்கு