ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானிக்கும் அவரது குடும்பத்துக்கும் வழங்கப்பட்ட இசட் ப்ளஸ் பாதுகாப்பை நீக்கக்கோரி ஹிமான்சு அகர்வால் என்பவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதற்கான தீர்ப்பு கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வழங்கப்பட்டது.
அப்போது, உயிருக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் நோக்கில் ஆபத்து இருக்கும்பட்சத்தில் பாதுகாப்புக்கான செலவுகளை அவர்களே ஏற்றால் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்குவதில் எந்த தடையும் இல்லை என மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதேபோல், முகேஷ் அம்பானியின் குடும்பமும் தங்கள் பாதுகாப்புக்கான செலவுகளை அவர்களே ஏற்பதால் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்குவதில் எந்த தடையும் இல்லை என நீதிமன்றம் தெரிவித்தது.
மும்பை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஹிமான்சு அகர்வால், உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை அசோக் பூஷன் தலைமையிலான அமர்வு விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. அப்போது, பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கருதி இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கும் முடிவை அரசே எடுக்கலாம் என நீதிமன்றம் தெரிவித்தது.
முகேஷ் அம்பானிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பை நீக்க கோரிய வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.